தமிழ்நாடு

பாலம் கட்டுமான பணிக்கு... வர மாட்டோம்! டெண்டர் கோர யாருமில்லை!

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாலம் கட்டுமான பணிக்கு... வர மாட்டோம்! டெண்டர் கோர யாருமில்லை!

கோவை;உக்கடம் பாலத்தை ஆத்துப்பாலம் வரை நீட்டிக்க, எந்த நிறுவனமும், 'டெண்டர்' கோரவில்லை. அதனால், 15 நாட்கள் அவகாசம் அளித்து மறுடெண்டர் கோர, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், உக்கடம் - கரும்புக்கடை வரை, மேம்பாலம் கட்டப்படுகிறது.
இது, வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்காது என்பதால், ஆத்துப்பாலம் வரை நீட்டிக்க, பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழக முதல்வர் பழனிசாமி கவனத்தை ஈர்க்கும் வகையில், நமது நாளிதழிலும், விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.இதன் பின், ஆத்துப்பாலம் சந்திப்பு வரை பாலம் நீட்டிக்கப்பட்டும், சுங்கத்தில் இருந்து வாலாங்குளம் ரோட்டில் வருவோரும், பாலத்தை பயன்படுத்தும் வகையிலும், வடிவமைப்பு மாற்றப்பட்டது.
இதற்கு ரூ.265.44 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து, 'டெண்டர்' கோரப்பட்டது. எந்தவொரு நிறுவனமும், 'டெண்டர்' கோராததால், மாநில நெடுஞ்சாலைத்துறையினர் 'அப்செட்' ஆகினர். கட்டுமான நிறுவனங்களிடம் பேச்சு நடத்தியும் கூட, எவரும் ஆர்வம் காட்டவில்லை.இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசிடம் அனுமதி பெற்று, பாலத்தை நீட்டித்து கட்ட, நிதி பெறப்பட்டுள்ளது.
'கொரோனா' பிரச்னை காரணமாக, தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தால், கட்டுமான நிறுவனங்கள் டெண்டர் கோர தயக்கம் காட்டுகின்றன.குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடிக்க முடியாவிட்டால், பொருளாதார இழப்பு ஏற்படும் என, கட்டுமான நிறுவனங்கள், காரணம் கூறுகின்றன.கட்டுமான நிறுவனங்களிடம், தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். 15 நாட்கள் அவகாசம் அளித்து, மீண்டும் மறுடெண்டர் கோரப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-202007:14:18 IST Report Abuse
ஆரூர் ரங் எடப்பாடி ஆட்சியில் வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம்னு சுடாலின் அறிக்கை விடுறார். ஆனா இங்கே என்னடான்னா வேலைக்கு ஆளில்லாம ஒப்பந்தம் எடுக்க ஆளில்லை. எது உண்மை ? ஜல்லிகட்டுப் போலிப் போராளிகளைப் பிடித்து வேலை வாங்குங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X