பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அறிகுறி இருக்கா? ரேஸ்கோர்சில் கணக்கெடுப்பு 

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கோவை;ரேஸ்கோர்ஸ் பகுதியில், கொரோனா அறிகுறி யாருக்கேனும் உள்ளதா, வெளியூரிலிருந்து யாரேனும் வந்து தங்கி உள்ளனரா என வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி நடந்தது. கோவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் வேளையில், அதை தடுக்க, மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரேஸ்கோர்சிலுள்ள குடியிருப்பு பகுதிகளில், அன்றாடம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அதோடு மதிய நேரத்தில் வீடு, வீடாக துாய்மைப்பணியாளர்கள் ஆய்வுப்பணி மேற்கொள்கின்றனர்.காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளதா, வெளியூரிலிருந்து யாரேனும் வந்துள்ளனரா என்று விசாரிக்கின்றனர். இந்த தகவல்களுடன், மொபைல் போன் எண், வீட்டுமுகவரி, பணியிட விபரம் உள்ளிட்ட தகவல்களையும் பதிவு செய்து கொள்கின்றனர்.மாநகராட்சி துாய்மைப்பணியாளர்கள் கூறுகையில், 'காய்ச்சல், சளி, மூச்சுவாங்குதல், உள்ளிட்ட கொரோனா நோய் அறிகுறி இருப்பவர்கள் மட்டுமல்லாமல், நீரிழிவு, ரத்தஅழுத்தம், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் குறித்த தகவல்களையும், பதிவு செய்கிறோம். இந்த விபரங்களின் அடிப்படையில், மாநகராட்சி சுகாதாரத்துறையினர், கொரோனா பரிசோதனை நடத்துவதா அல்லது சிகிச்சை அளிப்பதா என முடிவு செய்வர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X