சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனை: நான்கு பேர் கைது

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கோவை:கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, நான்கு பேரை கைது செய்த போலீசார், ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கோவை துடியலுார் அருகே உள்ள பூனம்பாளையம் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில், சுற்றிக் கொண்டிருந்த நபரை பிடித்து, விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் புதுக்கோட்டையை சேர்ந்த சசிக்குமார், 24 என தெரிந்தது. அவர் அப்பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.100 கிலோ கஞ்சாவை, பறிமுதல் செய்தனர்.இதேபோல், சுண்டக்காமுத்துார் ரோடு, செங்குளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குமார், நாகராஜ், குனியமுத்துார், இடையர்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோபிநாத், 28 ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த தலா, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X