சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாட்டிலால் தாக்கிய 3 இளைஞர்கள் கைது

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கோவை:கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 30. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன், பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராபின்ராஜ், 21, சரவணன், 22, வினோத், 20 ஆகிய மூவரும், மொபைல்போன் தருமாறு கேட்டுள்ளனர்.ராஜா மறுப்பு தெரிவிக்கவே, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மூவரும், ராஜாவை பீர்பாட்டிலால் தாக்கினர். படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X