பொது செய்தி

தமிழ்நாடு

முககவசம் போடலை: ரூ. 2.73 லட்சம் வசூல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அன்னூர்:அன்னூர் பேரூராட்சியில், முக கவசம் அணியாதவர்களிடம், இரண்டு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.அன்னூர் பேரூராட்சியில் நேற்று, சமூக இடைவெளி இல்லாமல் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் வாகனங்களுக்கு, தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. முக கவசம் அணியாதவர்களுக்கு, தலா 100 ரூபாய் என, நேற்று 6 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூல் ஆனது. ''இதுவரை, பேரூராட்சியில், 2 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது," என, செயல் அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X