பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்புடன் 'டூட்டி' பார்க்க போலீஸ் கமிஷனர் 'அட்வைஸ்'

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 பாதுகாப்புடன் 'டூட்டி' பார்க்க போலீஸ் கமிஷனர் 'அட்வைஸ்'

கோவை:மாநகர போலீசாருக்கு, கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் வழங்கினார்.கொரோனா பாதிப்புக்குள்ளாகும் போலீசாரின் எண்ணிக்கை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் போத்தனூர், துடியலூர், சூலூர், உக்கடம், தொண்டாமுத்தூர், மதுக்கரை ஆகிய போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார், கொரோனா தொற்றுக்குள்ளாகினர்.இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை சரவணம்பட்டி மற்றும் செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் போலீசாருக்கு முகக்கவசம், சானிடைசர், கண்ணாடி, கையுறை, தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கினார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ''கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பணியில் உள்ள போலீசார், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பணியின் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X