பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் கைகளில் பெண்களின் சுகாதாரம்! வெரிகுட் விழிப்புணர்வு சேவை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
மாணவர்களின் கைகளில் பெண்களின் சுகாதாரம்! வெரிகுட் விழிப்புணர்வு சேவை

கோவை: கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவர் குழுவினர், பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு உதவும் வகையில், இலவசமாக 'நாப்கின்' வினியோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அன்றாடம் கூலி வேலைக்கு செல்வதை, வாழ்வாதாரமாக கொண்ட குடும்பத்தினர் பலரும், கொரோனா தொற்று காரணமாக, வேலை இழந்து, வருவாய் இழந்துள்ளனர்.இத்தகைய குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு உதவும் வகையில், கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியர், இலவசமாக 'சானிட்டரி நாப்கின்' வினியோகம் செய்து வருகின்றனர்.

'வரம்' என்ற பெயரில், விழிப்புணர்வு பிரசாரமாக, இந்த பணியை செய்யும் குழுவில், 15 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், கோவையை அடுத்த அன்னுார் கோவில்பாளையம் பகுதியில், 6 குடியிருப்புகளில், 1500 பேருக்கு நாப்கின் வினியோகம் செய்துள்ளனர். சித்தாபுதுார், புலியகுளம் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் இருக்கும் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்து, அங்கும் வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து குழு தலைவர் நிவேதா ரவிக்குமார், ஒருங்கிணைப்பாளர் மோகன் பிரசாத் கூறியதாவது:கொரோனாவால் வருவாய் இழந்த, குடும்ப பெண்களின் அடிப்படை சுகாதாரத்தை காக்கும் நோக்கத்துடன், இலவசமாக நாப்கின் வழங்கி வருகிறோம்.பணம் இல்லாததை கருத்தில் கொண்டு, சுகாதாரமான நாப்கின் பயன்படுத்தாமல், மீண்டும் பழைய நிலைக்கு பெண்கள் சென்று விடக்கூடாது என்று எண்ணியே, இந்த பணியை தொடங்கினோம்.

இதனால் அவர்களின் சுகாதாரம் காக்கப்படுவதோடு, தன்சுத்தம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுகிறது.அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில், முன்கூட்டியே சர்வே நடத்தி, அதன் அடிப்படையில் நாப்கின் வழங்குகிறோம். இந்த நாப்கின்கள், இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்டவை.

எங்கள் 'பாக்கெட் மணி' கொண்டு துவக்கிய இந்த திட்டத்துக்கு, இப்போது ஆன்லைனில், 'கிரவுட் பண்டிங்' முறையில் நிதி திரட்ட தொடங்கியிருக்கிறோம். கோவை ரோட்டரேக்ட் சங்கத்தினர் ஆதரவு வழங்குகின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

பணம் இல்லாததை கருத்தில் கொண்டு, சுகாதாரமான நாப்கின் பயன்படுத்தாமல், மீண்டும் பழைய நிலைக்கு பெண்கள் சென்று விடக்கூடாது என்று எண்ணியே, இந்த பணியை தொடங்கினோம். இதனால் அவர்களின் சுகாதாரம் காக்கப்படுவதோடு, தன்சுத்தம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X