கந்த சஷ்டி கவச பாடல்கள் இல்லங்களில் பாட வேண்டுகோள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்த சஷ்டி கவச பாடல்கள் இல்லங்களில் பாட வேண்டுகோள்

Added : ஜூலை 24, 2020
Share

ஊட்டி:'முருக பக்தர்கள் அவரவர் இல்லங்களில் கந்த சஷ்டி பாடலை பாட வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை பொறுப்பாளர் குமாரசாமி அறிக்கை:கந்த சஷ்டி கவசத்தின் பெருமையை உலகறிய, ஆக., 9ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும். முருக பக்தர்கள் பேரவை; பாத யாத்திரை குழுவினர்; கிருத்திகை சங்கத்தினர்; சஷ்டி குழுவினர்; முருக பக்த மகளிர் குழுவினர் தவறாமல் அவரவர் இல்ல வாயில்களில் நின்று முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X