பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் கொரோனா புது உச்சம்!ஒரே நாளில் 238 பேருக்கு தொற்று

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக, நேற்று ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு 2,777 ஆக உயர்ந்தது.கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே மத்திய பாதுகாப்பு படை முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற்று வரும், 36 வயது வீரருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. ராக்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் நகை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்கனவே, 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் பணியாற்றி வரும், 30, 43 வயது ஆண்கள், பீளமேடு, நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லுார், ராமநாதபுரம் பகுதிகளில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த நான்கு செவிலியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குனியமுத்துார் - 9, போத்தனுார் - 8, மதுக்கரை -- 8, குரும்பம்பாளையம் -- 8, பீளமேடு - 6, குறிச்சி -- 6, கரும்புக்கடை- 5, கோவைப்புதுார் 4 என, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 238 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தபாதிப்பு 2,777 ஆக உயர்ந்தது. கடந்த நான்கு நாட்களில் மட்டும், 721 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஐந்து பேர் பலிகோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 55 வயது பெண், தெலுங்குபாளையம் புதுார் சக்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த 60 வயது முதியவர், காந்திபார்க் பகுதியில் வசித்து வந்த 75 வயது முதியவர், எம்.ஜி., வீதியை சேர்ந்த 59 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், கோவையில் நேற்று உயிரிழந்தார்.198 பேர் டிஸ்சார்ஜ் கோவையில் மருத்துவனைகள், சிறப்பு மையங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 198 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 1,463 பேர் நோய் குணமாகி, வீடு திரும்பியுள்ளனர். 1,270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X