பொது செய்தி

தமிழ்நாடு

கண்களுக்கு விருந்தளிக்கும் கடல் விசிறி

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கண்களுக்கு விருந்தளிக்கும் கடல் விசிறி

வாலிநோக்கம்:மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் கீழ் உள்ளவனப்பகுதியில் 21 தீவுகள் அமைந்துள்ளன.

மண்டபம் பகுதியில் 7, கீழக்கரையில் 7, சாயல்குடி 3, துாத்துக்குடியில் 4 தீவுகள் காணப்படுகின்றன. தீவுகளை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதியில் காணப்படும் கடல் விசிறிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளன.கடலின் அடிப்பகுதியில் மட்டுமே வாழும் உயிரினமாகும்.இவை ஒரே இடத்தில் நின்று வளரும் தன்மை கொண்டவை.சல்லடை போன்ற தோற்றம் கொண்டது.

நீர் வழியே கடந்து செல்லும் கண்ணுக்கு புலப்படாத சிறிய உயிரினங்களை உண்டு வாழும். சல்லடை வழியே வடிகட்டி உண்பது இதன் தனிச்சிறப்பு. இதன் விலங்கியல் பெயர் கார் கோனியன் ஆகும். 15 ஆண்டுகளை கடந்த பின்னரேமுழு வளர்ச்சியுடன் இருக்கும். கடலின் அடியில் இருக்கும்.

இதன் உருவ அமைப்பு மீன்கள் உற்பத்தி, நண்டு, சிப்பிகள் இனப்பெருக்கத்திற்கு பேருதவியாக உள்ளது. பெரும்பாலும் பவளப்பாறைகளை ஒட்டிய பகுதியில் காணப்படும். வசிக்கும் இருப்பிடத்திற்கு ஏற்ப நிறங்கள் வேறுபடும்.20 வகையான கடல் விசிறி இனங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகிறது.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் போது கடல்விசிறிகள் அழியும்அபாய நிலைக்கு தள்ளப்படுகின்றன. வலைகளில் கடல் விசிறிகள் சிக்கினால்உடனே கடலிலேயே விட்டுவிடுமாறு மீனவர்களிடம் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-202014:40:13 IST Report Abuse
ருத்ரா நீருக்குள் வேர்க்குமா! அழகிய விசிறி. Lovely.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X