பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி வளர்ச்சி திட்டத்தில் 250 ஏக்கரில் எள் சாகுபடி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 மானாவாரி வளர்ச்சி திட்டத்தில் 250 ஏக்கரில் எள் சாகுபடி

காரைக்குடி:காரைக்குடி அருகே திருவேலங்குடியில் 250 ஏக்கரில் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர்.

சாக்கோட்டை ஒன்றியத்தில், வேளாண்துறை சார்பில் நிலைத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்க திட்டம் மூலம் கேழ்வரகு 200, குதிரைவாலி 50, உளுந்து 250, எள் 100 எக்டேரில் சாகுபடி செய்ய வேளாண்மை துறையினர் திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்தில் கோடை உழவிற்கு ஏக்கருக்கு 1250 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விதை, திரவ உயிர் உரம் 50 சதவீத மானியத்தில் தரப்படும்.

இத்திட்டத்தில் திருவேலங்குடி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மானாவாரியாக எள் சாகுபடி செய்ய, விதை வழங்கினர். இக்கிராம விவசாயிகள் 250 ஏக்கரில் எள் சாகுபடி செய்துள்ளனர். எள் பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில், வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், துணை இயக்குனர் தனபாலன், உதவி இயக்குனர் சண்முக ஜெயந்தி உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு களத்தில் ஆலோசனை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X