சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கடத்தல் வழக்கில், 6 பேர் கைது; கார் பறிமுதல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

வெள்ளக்கோவில்:வாலிபரை கடத்திய சம்பவத்தில், ஆறு பேரை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.திருப்பூரை அடுத்த வெள்ளகோவில் முத்துார் ரோட்டை சேர்ந்தவர் ஹித்தேஷ் சவந்திலால் குரியா, 24; பஞ்சு குடோன் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை செய்து நின்ற, கரூரை சேர்ந்த கண்ணன் என்பவர், ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டு வந்தார்.கண்ணனின் வற்புறுத்தல் காரணமாக, ஹித்தேஷ் சவந்திலால் குரியா ஷேர் மார்க்கெட்டில் சேர்ந்தார். இதற்காக, ஏழு லட்சம் ரூபாய் வரை கண்ணனிடம் கொடுத்தார்.இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 21ம் தேதி ஹித்தேஷ் சவந்திலால் மகன் என்று நினைத்து, அவரின் உறவுக்காரரின் மகனான, அபிஷேக்கை, 24 என்பவரை, ஏழு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது. அதன்பின், விஷயம் தெரியவே, தாசநாயக்கன்பட்டியில் அவரை விட்டு சென்றனர்.ஆறு பேர் கைதுஇதனால், கடத்தல் தொடர்பாக, காங்கயம் டி.எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இது தொடர்பாக, கண்ணன், ஈரோட்டை சேர்ந்த சந்திரசேகரன், 33, சேலத்தை சேர்ந்த சதீஷ், 30, ராகுல், 29, சந்தோஷ், 29 மற்றும் சபரிநாதன், 36 என, ஆறு பேரை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X