சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மேலாளருக்கு கொரோனா தபால் அலுவலகம் மூடல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 பெண் மேலாளருக்கு கொரோனா தபால் அலுவலகம் மூடல்

மானாமதுரை:மானாமதுரை தலைமை தபால் அலுவலகத்தில் செயல்படும், இந்தியா போஸ்டல் வங்கியின் 42 வயது பெண் மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தபால் அலுவலகம் மூடப்பட்டது.

மதுரையை சேர்ந்த இப்பெண் அதிகாரி தினமும் அங்கிருந்து மானாமதுரைக்கு பணிக்கு வந்து சென்றுள்ளார். இவருக்கு திடீர் காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. ரத்தம், சளி மாதிரி பரிசோதனையில் தொற்று உறுதி என தெரிவித்தனர். இதையடுத்து தலைமை தபால் அலுவலகம் மூடப்பட்டது. தற்சமயம் கன்னார்தெருவில் உள்ள கிளை தபால் அலுவலகத்தில் செயல்படும். அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தபால் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X