வாலிபர் தற்கொலையில் மர்மம் :போலீசார் தீவிர விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலையில் மர்மம் :போலீசார் தீவிர விசாரணை

Added : ஜூலை 24, 2020
Share

அவிநாசி:அவிநாசியில், மர்மமான முறையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.அவிநாசி, காமராஜ் நகரில் வசிப்பவர் கார்த்திகேயன், 30. கார்பென்டர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, இவர் வீட்டில், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அவர்கள் கூறியதாவது:தற்கொலை செய்து கொண்ட கார்த்திகேயனுக்கு, திருமணமாகி, மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தற்போது, ராதிகா, 35 என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். ராதிகாவின் முதல் கணவர், கடந்த, 6 ஆண்டிற்கு முன், சாலை விபத்தில் இறந்தார்.அவரது மகன் மாதேஷ், கடந்த, 2018இல் இறந்துவிட்டார். மகள் சுகாசினி, வெளியூரில் படித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக, ராதிகாவுடன் அவிநாசியில் வசித்து வருகிறார். ஏதோ காரணத்திற்காக, கார்த்திகேயன் சேலையால், தனது கழுத்தை இறுக்கி, தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். இருப்பினும், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X