பொது செய்தி

தமிழ்நாடு

மாசுகட்டுப்பாடு அதிகாரிகள் திடீர் 'டிரான்ஸ்பர்'

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரியம், வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு பொறியாளர் அலுவலகங்களுடன் இயங்குகிறது. குமரன் வணிக வளாகத்தில் வடக்கு அலுவலகம், பல்லடத்தில், தெற்கு அலுவலகம் உள்ளது. ராயபுரத்தில், பறக்கும்படை அலுவலகம் செயல்படுகிறது.தமிழகம் முழுவதும், மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில், திருப்பூர் மாசுகட்டுப்பாடு வாரிய வடக்கு பொறியாளராக பணிபுரிந்த செந்தில்விநாயகம், ஈரோடு மாவட்ட பொறியாளராக இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதில், பெருந்துறையில் பணிபுரிந்த சரவணகுமார், வடக்கு பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு பொறியாளர் சண்முகம், மதுரைக்கு சுற்றுச்சூழல் பொறியாளராக இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதில், குமாரபாளையத்தில் பணிபுரிந்த சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X