பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., கவுன்சிலிங் முன்பதிவு:கூட்டுறவு சங்க அலுவலகத்தில் ஏற்பாடு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திருப்பூர்:பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் இன்ஜி., படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கியுள்ளன.உயர்கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இணைந்து நடத்தும், 'ஆன்லைன் கவுன்சிலிங்' விண்ணப்பபதிவு, கடந்த, 15ம் தேதி முதல் துவங்கி ஆக., 16 வரை நடக்கிறது. ரேண்டம் எண் ஆக.,21ம் தேதியும், தரவரிசை பட்டியல், செப்., 7ம் தேதியும் வெளியிடப்படும்.தற்போது பஸ் வசதி இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை தவிர்க்கும் விதமாக, அருகில் உள்ள இ -சேவை மையம், அரசு கேபிள் டிவி அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்க அலுவகங்களில் மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.மாவட்ட சேவை மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:ஊரடங்கு அமலில் உள்ளதால், திருப்பூர் மாணவர்கள் விண்ணப்பிப்பது குறித்த ஆலோசனைக்கு, 99440 08030 என்ற எண்ணை அழைக்கலாம். நீங்கள் இருக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள தாலுகா அலுவலகம், கூட்டுறவு வங்கி மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களை அறிந்து கொள்ள, http://tnega.tn.gov.in/csclocation, http://www.tactv.in/tactv_district_offices.php, http://www.tncu.tn.gov.in/coop_societies.html என்ற லிங்கை பயன்படுத்தவும்.இதில் மையங்களின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை கூகுள் மேப்புடன் வரும். இதன்மூலம் எளிதில் தொடர்பு கொண்டு நேரில் சென்று பாதுகாப்பாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X