கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம் :காமுகனுக்கு ஆயுள் சிறை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருமண ஆசை காட்டி, சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.உடுமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள், 31. இரும்பாலை தொழிலாளி. திருமணமானவர். இவரது மனைவி வழி உறவினர் குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகினார். சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தார்.இது குறித்து சிறுமியின் தாய், கடந்தாண்டு பிப். மாதம், உடுமலை மகளிர் போலீசில் புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த போலீசார் பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது குறித்த வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், பெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X