சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவர் கொலை: மேலும் ஒருவர் கைது

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், டிரைவர் கொலை வழக்கில் மேலும், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து, 32; டிரைவர். இவரது மனைவி மருதுவடிவு, 26. தம்பதியருக்கு, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.குடும்பத்துடன் திருப்பூர், நாச்சிபாளையத்தில் தங்கியுள்ளார்.கடந்த, 11ல், திருப்பூர் - மங்கலம் ரோடு லிட்டில் பிளவர் நகர், 2வது வீதியில் உள்ள கோவில் அருகில், பேச்சிமுத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக சென்ட்ரல் போலீசார் விசாரித்து வந்தனர்.அதில், வள்ளிநாயகம், 30 என்பவர் சாத்தான்குளம் ஜே.எம்., கோர்ட்டில் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில், சின்னாண்டிபாளையத்தை சேர்ந்த வெள்ளைபாண்டி, 31 மற்றும் அவரது உறவினர் திருநெல்வேலியை சுடலைமணி, 29 கைது செய்தனர்.தலைமறைவாக இருந்த, லிட்டில் பிளவர் நகர், 3வது வீதியை சேர்ந்த கண்ணன், 32 என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X