சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காற்றுடன் கனமழை: இடி தாக்கி வீடு சேதம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பல்லடம்:பல்லடத்திதல், நேற்று முன்தினம், இடியுடன் கூடிய மழை பெய்ததில், வாவிபாளையம் அருகே பழனிகவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சாமிநாதன் என்பவரின் வீட்டில் இடி தாக்கியது. அவரது மனைவி புஷ்பவதி, மற்றும் மகன் சதீஸ் ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இரவு, 8:00 மணிக்கு, மின்னல் தாக்கியதில், வீட்டின் மேற்கூரை மற்றும் மிக்ஸி உட்பட வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன.பல்லடத்தை அடுத்த அருள்புரம் பகுதியில், ரோட்டோரத்தில் இருந்த பழமையான வாகை மரம், நேற்று மதியம் வேருடன் சாய்ந்து அருகிலிருந்த டீக்கடை மீது விழுந்ததில் கடை சேதமானது.யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மழையால் பல்லடம் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில், மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X