சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு: இருவர் உயிரிழப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 33 பெருக்கு கொரோனா தொற்று உறுதியானது; இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு, 567 ஆக இருந்த நிலையில், நேற்று, 33 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. திருப்பூரில், 22 பேர்; தாராபுரத்தில், எட்டுபேர்; உடுமலையில், மூன்று பேர் என, 33 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.நேற்று மட்டும், 13 வயது சிறுமி உட்பட, ஏழு பெண்கள்; 26 ஆண்கள் என, 33 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. திருப்பூர் பிரியங்கா நகரை சேர்ந்த, 59 வயது ஆண்; எஸ்.வி., காலனியை சேர்ந்த, 71 வயது முதியவர் என, இரண்டு பேர் நேற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மாவட்டத்தின் கொரோனா உயிரிழப்பு, 10 ஆக உள்ளது. 371 ஆண், 229 பெண்கள் என, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 600 ஆக உயர்ந்துள்ளது; அவர்களில், 300 பேர் குணமாகிவிட்டனர். 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X