பொது செய்தி

இந்தியா

'பாலிவுட்' கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்திய மூவர் இந்தியா வர தடை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Pakistani, Bollywood, event manager, accused,terror links, blacklisted, Home Ministry

புதுடில்லி : அமெரிக்காவில், இந்தியாவுக்கு எதிராக அவதுாறு பிரசாரம் செய்த, பாக்., மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவரை, மத்திய அரசு, 'கருப்பு பட்டியலில்' சேர்த்துள்ளது. அதனால், 'பாலிவுட்' கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் இவர்கள் மூவரும், இனி இந்தியா வர முடியாது.

இந்தாண்டு துவக்கத்தில், சிவசேனா எம்.பி., ஷெவாலே, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், அமெரிக்காவில், ஹூஸ்டன் நகரில், வானொலி நிலையம் நடத்தி வரும், பாக்.,கைச் சேர்ந்த, ரெஹான் சித்திக் என்பவர், இந்தியாவை பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் அவதுாறான, தரக்குறைவாக பிரசாரம் செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

பாக்., நிதியுதவியில் வானொலி நிறுவனம் நடத்தும், ரெஹான் சித்திக், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ராகேஷ் கவுஷல், தர்ஷன் மேத்தா ஆகியோர் துணையுடன், பாலிவுட் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் கூறியிருந்தார்.


latest tamil news



இதையடுத்து, ஹூஸ்டன் நகர இந்திய துணை துாதரகத்தின் பரிந்துரையின் பேரில், ரெஹான் சித்திக், ராகேஷ் கவுஷல், தர்ஷன் மேத்தா ஆகியோரை, கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக, மத்திய உள்துறை இணையமைச்சர், கிஷன் ரெட்டி, ஷெவாலேக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த மூவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என, வாஷிங்டன், ஹூஸ்டன் நகரங்களில் உள்ள இந்திய துாதரகங்கள் மூலம், அங்குள்ள கலாச்சார அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் கடிதத்தில் கூறியுள்ளார்.இதனால், ரெஹான் சித்திக் உள்ளிட்ட மூவர், இந்தியா வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரெஹான் சித்திக் நடத்திய கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்து, அமலாக்கத் துறையும், தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரிக்க வேண்டும் என, ஷெவாலே வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covaxin - Bharat Hindustan,இந்தியா
24-ஜூலை-202013:23:03 IST Report Abuse
Covaxin உள்ளூர்லயே தேச விரோதமா பேசிக்கிட்டு, தேச விரோத செயல்களை செஞ்சுகிட்டு கொள்ளை பயலுக திரியிறானுங்க... அவனுங்களையெல்லாம் நாடு கடத்தணும்....
Rate this:
Cancel
தியாகி சுடலை மன்றம் நம்ம ஊருல சுடலை என்னும் ஒரு ஜந்து இருக்கு அது நம் நாட்டுக்கு எதிராக கோஷம் போட்டுக் கொண்டு இருக்கு தயவு செய்து உள்துறை அமைச்சர் மிக விரைவில் .....
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
24-ஜூலை-202008:57:32 IST Report Abuse
Srinivasan Rangarajan உள்ளூர் தேசதுரோகிகளையும் கவனியுங்க ...குண்டர் சட்டத்தில் பிடிச்சு உள்ள போட்டு வைங்க......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X