அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றும் திராவிட கட்சிகள் ஷியாம் கிருஷ்ணசாமி சாடல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மதுரை : ''இடஒதுக்கீட்டை வைத்து, திராவிட கட்சிகள், மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்றன,'' என, புதிய தமிழகம் கட்சியின், இளைஞரணி மாநில தலைவர், ஷியாம் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.

அவர் கூறியதாவது:இடஒதுக்கீடு என்ற பெயரில், கல்வி நிறுவனங்கள், அரசு பணிகளில் சில இடங்கள் வழங்கினால் மட்டும், சமூக நீதி கிடைக்குமா? மக்கள் தொகைக்கு ஏற்ப, அந்தந்த பிரிவினருக்கு உரிய பங்கீடு மற்றும் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது மட்டுமே, சமூக நீதிக்கு வழிவகுக்கும்.பட்டியல் ஜாதியினருக்கு, மத்திய தொகுப்பில் தர வேண்டிய இட ஒதுக்கீட்டில், 3 சதவீதம் தரவில்லை என, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் கூறுகின்றன. இது, புரிதலற்ற பேச்சு.அதாவது, தேசிய அளவில் பட்டியலின மக்கள், 15 சதவீதம். இதன் அடிப்படையில், இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அந்த, 15ல், 18 சதவீதம் வழங்குவது தான், 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் மட்டுமே, பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் என பிரித்து, 69 சதவீதம் இடஒதுக்கீடு கோரிக்கையை திராவிட, நீதிக் கட்சிகள் எழுப்பின.பிராமணர்கள் தவிர, பிற ஜாதியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் என, முத்திரை குத்தினர்.இட ஒதுக்கீடு என்பது ஒரு பிரதிநிதித்துவம் என்பதை தாண்டி, அது தான் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரும் எனக் கூறி, 70 ஆண்டுகளாக, திராவிடக் கட்சிகள் அரசியல் நடத்துகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X