சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திருச்சி : டீக்கடையில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி, வளநாடு அருகே, ஊத்துக்குழியில், தனலட்சுமி, 34, என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். அருகில், நாகராஜ், 40, என்பவர் ஓட்டல் வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, இருவரும், கடையை பூட்டி, வீட்டுக்கு சென்று விட்டனர்.நள்ளிரவில், டீக்கடையில் இருந்து அதிக அளவில் புகை வந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தனலட்சுமி, நாகராஜ், அவரது நண்பர் சுப்பிரமணியன், 42, ஆகியோர், தீயை அணைக்க முயன்றனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் டீக்கடையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதில், டீக்கடை, ஓட்டல் இடிந்து சேதமடைந்தன.நாகராஜன், தனலட்சுமி, சுப்பிரமணியன் மற்றும் கடை அருகே நின்றிருந்த இருவர் என, ஐந்து பேர் படுகாயம் அடைந்து, மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X