கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் பலாத்காரம் காமுகனுக்கு 34 ஆண்டுகள் சிறை

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, பெண்ணை பலாத்காரம் செய்து, 'வீடியோ' எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டவருக்கு, நாமக்கல் மாவட்ட, மகளிர் விரைவு நீதிமன்றம், 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. \

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர், சிவகுமார். இவரிடம், அதே மாவட்டத்தைச் சேர்ந்த, இளம்பெண் ஒருவர், 2010, ஏப்., 28ல், 1,000 ரூபாய் கடன் வாங்கி, திருப்பி தரவில்லை.அந்த பெண்ணை அடைய, சிவகுமார் சதி திட்டம் தீட்டியுள்ளார். தனக்கு தெரிந்த ஒருவர், சினிமா இயக்குனராக உள்ளார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை காட்டியுள்ளார்.பின், சினிமா இயக்குனர் ரவி என ஒருவரை அறிமுகம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அந்தப் பெண்ணை, சிவகுமார் பலாத்காரம் செய்ததுடன், ரவிக்கும் விருந்து படைத்துள்ளார். அதை, 'வீடியோ' எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்பெண் புகாரின்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, சிவகுமார், ரவியை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, 2011, டிச., 31ல், நாமக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிவகுமாருக்கு, 34 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த பெண்ணுக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.மற்றொரு குற்றவாளியான, ரவி ஏற்கனவே இறந்து விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X