சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பிரமுகர் வெட்டிக்கொலை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் தி.மு.க., பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பாபு. 45. தி.மு.க., செயற்குழு உறுப்பினரான இவர் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.இந்நிலையில் பாபு நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் மறைந்திருந்த மர்ம கும்பல் பாபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மயிலாடுதுறை எஸ்பி. ஸ்ரீ நாதா நேரில் விசாரணை மேற்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X