தமிழ்நாடு

ஆறுதல் : தொற்று எண்ணிக்கை குறைவதால் மக்கள் ; கொரோனாவிற்கு சிவகங்கையில் 54 பேர் பலி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவது மக்களுக்கு ஆறுதல் அளித்தாலும், தொற்று பாதித்து 54 பேர் பலியானது தான் அதிர்ச்சியை தருகிறது.

மார்ச் 30 ல் இருந்து இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று டில்லி, மும்பை, சென்னை, மதுரையில் இருந்து வந்தவர்கள் மூலம் பரவ தொடங்கியது. அந்தவகையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வெளிநாடு, மாநிலங்களில் இருந்து வந்த 25 ஆயிரம் பேரின் ரத்தம், சளி மாதிரியை பரிசோதனை செய்து, தொற்று உள்ளவர்களுக்கு சுகாதார மற்றும் மருத்துவத்துறை சார்பில் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

* சிவகங்கையில் 1512 பேர்:தொடர்ந்து, சர்க்கரை நோய், இருதய கோளாறு, சீறுநீரக பாதிப்பு, மூச்சுத்திணறல் போன்ற இணை பாதிப்பில் இருப்பவர்களுக்கு கொரானோ தொற்று பாதித்து, ராமநாதபுரம், மதுரை, சென்னை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு ஆயிரத்து 512 பேர் வரை வந்துள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளித்து குணமடைய செய்து வருகின்றனர்.

* 54 பேர் பலி:

இருப்பினும், கொரோனா அதிர்ச்சி தரும் விதத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வந்த 54 பேர் சிகிச்சை பலனின்றி பலியானது தான். மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே இன்னும் கவனமுடன் மக்கள் பொது இடங்களுக்கு முககவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தும், சானிடைசர் பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரித்துள்ளனர்.

வ.எண்/மாவட்டம்/ இறப்பு

1.சென்னை/1

2.மதுரை/ 2

3.ராமநாதபுரம்/14

4.சிவகங்கை/37

மொத்தம்: 54

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X