இந்தியா

கொரோனா இறப்புக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : ''கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்,'' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

சட்டசபையில் நேற்று அவர் கூறியதாவது:தேசிய அளவில், கொரோனா பாதிப்பால் இறப்பது, 2.5 சதவீதமாக உள்ளது. இது, புதுச்சேரியில், 1.4 சதவீதமாக இருக்கிறது. புதுச்சேரியில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு, அரிசி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. வேறு எந்த உதவிகளையும் செய்யவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர் வசிக்கும் பகுதி, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அங்கு வசிக்கும் மக்களுக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். கொரோனா தொற்று பாதிப்பால், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். புதுச்சேரி அரசின் வருவாய், 58 சதவீதமாக குறைந்துள்ளது.


மத்திய அரசும் நிதியுதவி தரவில்லை.ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகை, 490 கோடி ரூபாய் வரவில்லை. இந்த தொகை வந்ததும், மற்ற நிவாரண உதவிகள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X