சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அத்துமீறி மீன்பிடித்த 'களவாணி' விமல் பக்கத்தில் இருந்த 'பரோட்டா' சூரி

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கொடைக்கானல் : 'களவாணி' படத்தில் 'அறிக்கி' என்ற அறிவழகன் பெயரில் நடித்தவர் நடிகர் விமல். ஒரு காட்சியில் சோசைட்டிக்கு செல்லும் உரமூடையை திருடுவார்.

அந்த வகையில் அவர் சிரிப்பு நடிகர் 'பரோட்டோ' சூரியுடன்கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் சட்டவிரோதமாக நுழைந்து'களவாணி' ஸ்டைலில்மீன் பிடித்தார். இருவருக்கும் வனத் துறையினர் தலா ரூ.2000 அபராதம் விதித்தனர்.கொரோனா ஊரடங்கால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை உள்ளது.இந்நிலையில் நடிகர்கள் விமல், சூரி பேரிஜம் ஏரியில் மீன் பிடித்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.வனத்துறை விசாரணையில், ஜூலை 17ல் விமல், சூரி மீன் பிடித்தது தெரியவந்தது. இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம்அபராதம் விதிக்கப்பட்டது.ரேஞ்சர் கிருஷ்ணசாமி கூறுகையில், 'பணியில் அலட்சியம் காட்டிய சூழல் காவலர்கள் 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

மேலும் கொடைக்கானல் சமூக ஆர்வலர், டி.எஸ்.பி., ஆத்மநாதனிடம் புகாரளித்துள்ளார். விசாரணையில், நடிகர்கள் இ-பாஸின்றி வந்ததுதெரியவந்தது. தடையை மீறி வனப்பகுதிக்குள்எப்படி சென்றனர் என போலீசார் விசாரிக்கிறார்கள்.கொடையில் கொரோனா அதிகரித்து வருவதால் உள்ளூர் மக்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கும்போலீசார், மாவட்டநிர்வாகம் சினிமா பிரபலங்களை கண்டு கொள்ளவில்லை என உள்ளூர் மக்கள் புலம்புகிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-202018:34:11 IST Report Abuse
கதை சொல்லி ஊரடங்கு வருவதற்கு முன்பே பேரிஜம் ஏரி செல்ல தனியாக வனத்துறையினரிடம் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும். மோயர் பாய்ன்ட் என்ற இடத்தை தாண்டிச் செல்லவே அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதனை இவர்கள் எப்படி கடந்தனர்... அதற்கான நடவடிக்கை என்ன?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூலை-202007:48:45 IST Report Abuse
Bhaskaran திமிர் பிடிச்சவனுங்க .விமல் ஏற்கனவே குடி போதையில் தகராறு செய்து கைது செய்யப்பட்டுள்ளன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X