பொது செய்தி

தமிழ்நாடு

119 வயது முதியவர் மரணம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

நாகர்கோவில் : கேரளா, ஆலப்புழா அருகே மன்னார் பகுதியை சேர்ந்த 119 வயது முதியவர் கேசவன் நாயர் மரணம் அடைந்தார்.

பிரான்ஸ் முதியவரின் சாதனையை முறியடிக்க முடியாமல் உயிர் பிரிந்தது.இவர் 1901 ஜன., 1ல் பிறந்தார். மனைவி பாருக்குட்டி 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். 119 வயது ஆனாலும் தன் வேலையை தானே செய்தார். சமீப நாட்களாக கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. படுக்கையிலேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.சுதந்திரத்துக்கு பிறகு கேரளாவில் கம்யூ., ஆட்சி அமைந்தபோது அதற்கு எதிரான விமோசன சமரம் என்ற போராட்டத்தில் பங்கேற்றார். மகாத்மா காந்தி மற்றும் நேருவை சந்தித்தவர்.122 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிரான்ஸ் நாட்டின் ஜீன்கால்மென்ட் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X