அரண்மனைசிறுவயல் ஊரணியில் கழிவு நீர் | Dinamalar

அரண்மனைசிறுவயல் ஊரணியில் கழிவு நீர்

Added : ஜூலை 24, 2020
Share

கல்லல்:கல்லல் அருகே அரண்மனைசிறுவயலில் உள்ள அரண்மனை ஊரணியில் கழிவுநீர் கலப்பதால் நீரை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஊரணி கடந்த ஆண்டு துார்வாரப்பட்டது. தற்போது பெய்து வரும் மழைக்கு தண்ணீர் தேங்கி வருகிறது. இந்த நீரில் தான் அப்பகுதி மக்கள் குழித்தும், துணிகளை சலவை செய்தும், கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

கிராமத்திற்குள் சேகரமாகும் கழிவு நீர், இந்த ஊரணிக்குள் செல்வதால், தண்ணீரில் பாசி படர்ந்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. உள்ளாட்சி நிர்வாகம், கழிவுநீரினை ஊரணிக்குள் விடாமல், தனியாக கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X