மாசு கட்டுப்பாடு வாரிய உத்தரவு அலட்சியப்படுத்தும் பேரூராட்சி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

குரோம்பேட்டை: குரோம்பேட்டையில், கால்வாயில் கழிவு நீர் கலக்கும் வீட்டு இணைப்புகளை துண்டிக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை, பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.ஆக்கிரமிப்புகுரோம்பேட்டை வீரராகவன் ஏரியின் கலங்கல் கால்வாய், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து, ராணி தோட்டம், ரங்கநாதன், அய்யாசாமி, வரதராஜன், நல்லப்பா, சீனிவாசா தெருக்கள் வழியாக, செம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது.பல இடங்களில், இக்கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. குரோம்பேட்டை, நல்லப்பா தெருவில், கால்வாயை, நகராட்சியினர் அவ்வப்போது சுத்தம் செய்கின்றனர். ஆனாலும், ஒட்டியுள்ள வீடுகளில் இருந்து, மனித கழிவு கலப்பதும், குப்பை கொட்டுவதும் தொடர்ந்து நடக்கிறது.இதனால், துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் அதிகரித்து, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என, பிப்., 18ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து, இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, பல்லாவரம் நகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒருங்கிணைந்து, குழு அமைத்து, அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது.அதன்படி, அதிகாரிகள், கால்வாயை ஆய்வு செய்து, கழிவு நீர் கலக்கும் வீட்டு இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டனர். நடவடிக்கைபல்லாவரம் நகராட்சி நிர்வாகம், தன் எல்லையில் இருந்த, நான்கு வீடுகளில் இணைப்புகளை துண்டித்தது. ஆனால், கால்வாயின் மற்றொரு புறம், சிட்லபாக்கம் பேரூராட்சி எல்லையில் வருகிறது.அவர்கள், இதுவரை, இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பல முறை உத்தரவிட்டும், சிட்லபாக்கம் பேரூராட்சி நிர்வாகம், தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X