சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியோர் காப்பகத்தில் 34 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

வளசரவாக்கம், :ராமாபுரத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில், 12 வயது சிறுமி உட்பட, 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.வளசரவாக்கம் மண்டலத்தில், 4,498 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 76 பேர் உயிரிழந்த நிலையில், 3,721 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.தற்போது, 701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டலத்தில், ராமாபுரம், 154வது வார்டு, நாயுடு தெருவில், முதியோர் இல்லம் அமைந்துஉள்ளது.இங்கு, 80 முதியவர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 12 வயது சிறுமி உட்பட, 34 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், இரண்டு பேர், 90 வயது முதியவர்கள். மேலும், 12 பேர், 70 முதல்-, 80 வயது வரை உள்ளவர்கள்.மண்டலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஒரே இடத்தில், 34 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X