பொது செய்தி

தமிழ்நாடு

காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அண்ணாசாலை, தொற்றிலிருந்து மீண்டு, பணிக்கு திரும்பிய அண்ணா சாலை உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் உற்சாக வரவேற்பு அளித்தார்.சென்னையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில், காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட பலரும், தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து, மீண்டும் பணிக்கு திரும்பும் காவல் துறையைச் சேர்ந்தவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, நேற்று தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய, அண்ணாசாலை உதவி ஆய்வாளர் ரவி, 58, காவலர்கள் விஜயகுமார், கிரி, ஷீலா ஆகியோருக்கு, திருவல்லிக்கேணி துணை ஆணையர், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதில், அண்ணா சாலை ஆய்வாளர் சந்திரமோகன், உதவி ஆய்வாளர்கள், போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X