பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க வலியுறுத்தல்

Added : ஜூலை 24, 2020
Share
 பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் மரங்களில் வாழும் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்களை உண்டு வாழும் வவ்வால் கிராமப்பகுதிகளில் காணப்படுகின்றன. சிலர் மருத்துவ குணமிக்கதாக கருதி வவ்வால்களை வேட்டையாடு கின்றனர். இதனால் வவ்வால்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக மரங்களில் ஏராளமான பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. அவற்றை சிலர் தொந்தரவு செய்து வருகின்றனர். அழிந்துவரும் வவ்வால் இனத்தை பாதுகாக்க வனத்துறை முன்வர வேண்டும்.--

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X