சென்னையில் வேகமாக பரவும், 'டெங்கு' கொசு ஒழிப்பில் சுகாதாரத் துறை திணறல்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 சென்னையில் வேகமாக பரவும், 'டெங்கு' கொசு ஒழிப்பில் சுகாதாரத் துறை திணறல்

சென்னை :'டெங்கு' காய்ச்சல் பரப்பும், 'ஏடிஸ்' கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வந்த மலேரியா ஊழியர்கள், தற்போது, கொரோனா தடுப்பு பணியில் உள்ளதால், கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல், சுகாதாரத் துறை திணறுகிறது.சென்னையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்விலும், அதிக பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், தொற்று பாதிப்பு குறைந்து வருவது, ஆறுதல் அளிக்கிறது. இருந்தாலும், மாநகராட்சியின் அனைத்து துறை ஊழியர்களும், தடுப்பு நடவடிக்கையில் உள்ளனர்.இந்நிலையில், சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. குறிப்பாக, 20 வயதுக்கு உட்பட்டவர்கள், அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். நங்கநல்லுாரைச் சேர்ந்த ஒரு சிறுமி, டெங்குவால் பலியானார்.அனைத்து ஊழியர்களும், கொரோனா தடுப்பு பணியில் உள்ளதால், டெங்கு பரப்பும் கொசுவை ஒழிப்பதில், தீவிர கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.குறிப்பாக, கொசு ஒழிப்பு பணியில், மலேரியா ஊழியர்கள் ஈடுபடுவர். தற்போது, அவர்கள் தொற்று பாதித்தவர்களை அடையாளம் காண்பது, உயர் பரிசோதனை மற்றும் மருத்துவமனைக்கு அனுப்புவது, கிருமி நாசினி தெளிப்பு, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை கண்காணிப்பது, களப்பணியாளர்கள் பணிகளை மேற்பார்வையிடுதலில் ஈடுபடுகின்றனர்.இவர்களை, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தினால், தொற்று தடுப்பு பணியில் தொய்வு ஏற்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.இது குறித்து, சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:மலேரியா ஊழியர்களை, வார்டு, தெருவாரியாக பிரித்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளோம். களப்பணியாளர்களுக்கு, அனுபவம் குறைவு என்பதால், அவர்களை சரியான முறையில் வேலை வாங்குவது, மலேரியா ஊழியர்கள் தான்.மேலும், மருத்துவ முகாம், கிருமி நாசினி தெளிப்பு, சளி மாதிரி சேகரிப்பு மையம், தனிமை முகாம், சிறப்பு மருத்துவமனை போன்றவற்றிலும், மலேரியா ஊழியர்கள் பணி புரிகின்றனர். அவர்களை, கொசு ஒழிப்பு பணிக்கு ஈடுபடுத்தினால், தொற்று தடுப்பு பணி பாதிக்கப்படும். தொண்டு நிறுவன ஊழியர்கள் வந்ததால், களப்பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.மழைக்காலத்தில், மர்ம காய்ச்சல் அதிகமாக பரவும். இதை கண்காணித்து தடுக்கும் நடவடிக்கையில், மலேரியா ஊழியர்களின் பங்கு மிக முக்கியம். இதை கவனத்தில் வைத்து, கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூலை-202013:01:34 IST Report Abuse
நக்கல் கொரோனாவை விட மோசமானது டெங்குவும், மலேரியாவும்... அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.. இல்லையென்றால், கொரோனா என்று தவறுதலாக நினைத்து டெங்கு நோயாளிக்கு மருந்தை கொடுத்து மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது...
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202010:10:58 IST Report Abuse
oce சென்னை முழுவதும் நிலத்தடி கழிவு நீர் சாக்கடைகள் குரோனாவுடன் கொசுவும் பரவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X