மருந்து சப்ளையர் வீட்டிற்கு, 'சீல்'

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் கொரோனாவால் முடக்கப்பட்ட பகுதியில், விதி மீறி செயல்பட்டதாக, மருந்து சப்ளையர் வீட்டிற்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.சென்னை, திருவொற்றியூர், தேரடியைச் சேர்ந்த, மருந்து மொத்த வினியோகஸ்தரான, 55 வயதான நபரின் மனைவி, தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.இதனால், அவர்கள் தங்கியிருந்த வீடு, முற்றிலும் தகரத்தால் அடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டது.வீட்டு தனிமை, இன்றுடன் முடியும் நிலையில், முடக்கப்பட்ட பகுதியில், தகரத்தை விலக்கி, சிலர் உள்ளே சென்று வருவதாகவும், பணிகள் நடப்பதாகவும் அக்கம் பக்கத்தினர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தபடி இருந்தனர்.உதவி செயற்பொறியாளர் நக்கீரன் தலைமையில், வரி மதிப்பீட்டாளர் பிரபு, உரிம ஆய்வாளர் தனலட்சுமி அடங்கிய குழுவினர், நேற்று காலை அங்கு சென்று பார்த்தனர்.அதில், தகரம் நீக்கப்பட்டு, வீட்டிற்குள் சென்று வருவது தெரியவந்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக, அந்த வீட்டின் கதவில், புதிய தகரம் அடிக்கப்பட்டு, முற்றிலும் முடக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.இச்சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X