தமிழ்நாடு

சென்னையில் 5 சதவீதமாக தொற்று குறையும் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நம்பிக்கை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை, :''சென்னையில், இந்த மாத இறுதிக்குள், தொற்று பரவல் எட்டு சதவீதமாகவும், ஆகஸ்ட் இறுதிக்குள், ௫ சதவீதத்திற்குள் கொண்டு வரவும், முயற்சிகள் நடக்கின்றன,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.சென்னை, வியாசர்பாடி, முல்லை நகரில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று மதியம் நடந்தது. இதில், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் பங்கேற்றார்.பின், அவர் அளித்த பேட்டி:சென்னையில், மே, ஜூனில், தொற்று அதிகரித்ததை தொடர்ந்து, மாநகராட்சி மற்றும் பல துறைகள் இணைந்து, வீடுதோறும், காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு, தொற்றை கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது.இங்கு, பரிசோதனையின் எண்ணிக்கை, ஆறு லட்சத்தை நோக்கி செல்கிறது. நேற்று, 12 ஆயிரம் பரிசோதனைகளில், 1,171 தொற்று உறுதியாகியுள்ளது. இது, 10 சதவீதத்திற்கு கீழாகும்.இந்த முடிவுகளை வைத்து, திருப்தி கொள்ள முடியாது. இது முடிவும் இல்லை. இன்னும் மூன்று மாதங்களுக்கு, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த மாத இறுதிக்குள், தொற்று பரவல், எட்டு சதவீதமாவும், ஆகஸ்ட் இறுதிக்குள், ஐந்து சதவீதத்திற்குள் கொண்டு வரவும், முயற்சிகள் நடக்கின்றன.வட சென்னையில், தொற்று பரவல், 50 - 60 சதவீதமாக இருந்த நிலையில், மாநகராட்சி மேற்கொண்ட களப்பணியால், 10 சதவீதத்திற்குள்ளாக குறைந்துள்ளது.'சென்னை சமூக களப்பணி திட்டம்' மூலம், 92 தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சென்னையின் குடிசைப் பகுதிகளை, 1,979 மையங்களாக அமைத்து, 4,523 நிறுவன ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இதுவரை, ஆறு லட்சத்து, 5,785 வீடுகள், களப்பணியாளர்களால் தெரிவு செய்யப்பட்டு, வீடுதோறும் உள்ள முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது.இதுவரை, 1.5 லட்சம், 'இ - பாஸ்'கள் வழங்கப்பட்டுள்ளன. ரஜினி, கேளம்பாக்கம் செல்ல, இ - பாஸ் வாங்கினாரா என்பது குறித்து, ஆய்வு செய்யப்படுகிறது. பின், அது குறித்து தெரிவிக்கப்படும். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.மார்க்கெட், தெருவோர வியாபாரிகளிடம், தினசரி, 750 பரிசோதனைகள் வரை எடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு, அவர்களுடனான தொடர்பு அதிக நபர்களுக்கு ஏற்படுவதால், தொற்று பரவலை கண்காணிக்க, இம்முயற்சி எடுக்கப்படுகிறது.பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, மார்க்கெட் பகுதிகளில், 'சிசிடிவி கேமரா' அமைக்கப்பட்டு, மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுள்ளது. சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பொறியாளருக்கு பணிகமிஷனர் புது விளக்கம்!களப்பணிக்கு வந்த கல்லுாரி மாணவியிடம், காதல் வசனம் பேசி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட, ராயபுரம் மண்டல உதவி பொறியாளர் கமலக்கண்ணனுக்கு, மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், ''கொரோனா காலத்தில், வேலையின்றி யாருக்கும் சம்பளம் அளிக்கக்கூடாது என்பதற்காக, உதவி பொறியாளர் கமலக்கண்ணனுக்கு, மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. ''பணியிடை நீக்கம் முதல் நிலை நடவடிக்கை. அதுவே தண்டனை கிடையாது. அவர் மீதான புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தனிக்குழு விசாரணை நடத்தி வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X