தமிழ்நாடு

மதுரையில் ரேஷன் கடைகளில் ரூ.500 மலிவு விலை பாக்கெட்டுகள் கெட்டுப்போய் தேக்கம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மதுரை : மதுரையில் ரேஷன் கடைகளில் ரூ.500 மலிவு விலை பாக்கெட்டுகள் கெட்டுப்போய் தேங்கியுள்ளன. தரமில்லாத உணவுப்பொருட் களால் மக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு காய்கறி, பலசரக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதை தவிர்க்க மஞ்சள்,சீரகம், மிளகாய், பொரி கடலை, மிளகு, வெள்ளைப்பூண்டு உட்பட 19 பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டன. பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கொள்முதல் செய்யப்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், நகர் கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டன. பொருட்கள் தரமில்லாததால் 90 சதவீதம் பாக்கெட்டுகள் தேங்கியுள்ளன.ரேஷன்கடைபணியாளர்கள் கூறியதாவது: மே மாதம் கொள்முதல் செய்ததால் தற்போது பொருட்கள் கெட்டுப் போய் துர்நாற்றம் வீசுகின்றன. சங்கங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கெட்டுப் போன பைகளை பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை திரும்ப பெற வேண்டும், என்றனர்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X