தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை கண்காணிப்பு கலெக்டர் அறிவுறுத்தல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

உசிலம்பட்டி :தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கொரோனா பரிசோதனைகளை தினமும் கண்காணிக்க வேண்டும் என உசிலம்பட்டியில் கலெக்டர் வினய் அறிவுறுத்தினார்.கொரோனாவை கட்டுப்படுத்த நகராட்சி, கிராமங்களில் தொட்டப்ப நாயக்கனுார் ஆரம்ப சுகாதார மையம் சார்பில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடக்கின்றன. நகராட்சி 1வது வார்டு மாமரத்துப்பட்டியில் நடந்த முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். தொற்று ஏற்பட்டோர் விவரம், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை கேட்டறிந்தார். தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் பரிசோதனைகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் சுசிலா, ஆர்.டி.ஓ., ராஜ்குமார், தாசில்தார் செந்தாமரை உள்ளிட்டோர் உடன் சென்றனர். முன்னதாக செல்லம்பட்டி ஒன்றியம் முண்டுவேலன்பட்டி முகாம், மதுரை வடபழஞ்சி ஐ.டி., பூங்காவில் அமையும் கோவிட் கேர் சென்டர் பணிகளை பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X