தமிழ்நாடு

அச்சமில்லை: மாவட்ட மக்களுக்கு:சமூக இடைவெளி ,முகக்கவசம்அவசியம்,

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மாவட்டத்தில் கொரோனா தொற்று மூவாயிரத்தை நெருங்குகிறது. தினசரி 100 பேர் வரை பாதிப்பு ஏற்படுகிறது. இன்னும் பரிசோதனைகளை அதிகரித்தால் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்வது நிச்சயம்.


அச்சமில்லை

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு அறிகுறிகள் தீவிரமாக இல்லாததால் அச்சமின்றி சாலைகளில் உலா வருகின்றனர். அரசு கூறும் விதிமுறைகளை சிறிதும் கடைபிடிப்பது இல்லை. குறைந்த பட்சம் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியவேண்டும் என்ற சாதாரண விஷயத்தைகூட கடைபிடிப்பது இல்லை.ராமநாதபுரம் நகர் பகுதியில் வழக்கம் போல் சாலைகள், தினசரி சந்தைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.எந்த இடத்திலும் ஆரம்பத்தில் இருந்தது போல் யாரும் சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை. அதற்கு காரணம் கொரோனா குறித்த அச்சம் சிறிதும் இல்லாததுதான்.


இருவர் பலி



கொரோனா தொற்று ஏற்பட்டால் உயிர்பலியும் அதிகரிக்கத்தான் செய்கிறது. மாவட்டத்தில் 2792 பேர் தற்போது பாதிக்கப்பட்ட நிலையில் 61 பேர் இறந்துள்ளனர். அதன் படி 100 பேருக்கு 2 பேருக்கும் மேல் இறப்பு விகிதம்உள்ளது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்ற நோய்களில் இதுபோன்ற இறப்பு விகிதம் இல்லை. நோய் பரவுதலும் இல்லை.எனவே, மக்கள் சமூக அக்கறையுடன் சமூக இடைவெளி கடைபிடிப்பதும், முகக்கவசம் அணிவதும் அவசியம், தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X