பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் புத்தகங்களை பாதுகாக்க திறக்கப்பட்ட நுாலகங்கள்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மதுரை, கொரோனா ஊரடங்கால் மூன்று மாதங்களாக நுாலகங்கள் மூடப்பட்ட நிலையில் புத்தகங்களை பாதுகாத்து, பராமரிக்க சில வாரங்களுக்கு முன் நுாலகங்கள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட நுாலக அலுவலர் யசோதா கூறியதாவது: கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் நுாலகங்களை திறக்க முடியவில்லை. மூன்று மாதங்களாக பூட்டியிருப்பதால் புத்தகங்கள் சேதமாகும். அரசு அறிவுறுத்தலின்படி மைய நுாலகம் உட்பட 133 நுாலங்களை திறந்து சுத்தம் செய்துள்ளோம். புத்தகங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என கண்டறிந்து பராமரித்துள்ளோம். நுாலகத்தில் கிருமி நாசினி தெளிக்க இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு நீடிப்பதால் அலுவலக பணிக்காக மட்டும் பணியாளர்கள் வருகிறார்கள், என்றார்.புத்தகங்களை எப்படி பராமரிப்பதுபுத்தகங்களை அதிக வெப்பம், ஈரம், துாசி இல்லாத இடத்தில் அடுக்க வேண்டும். ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்காமல் செங்குத்து வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்க வேண்டும். கரையான் அரித்த புத்தகங்களை பிறபுத்தகங்களுடன் வைக்காமல் பிரிக்கவேண்டும். கரையான், கரப்பான் பூச்சி தொல்லைகளில் இருந்து புத்தகங்களை காக்க அடுக்கிய இடங்களில் சிறிதுமஞ்சள் பொடி துாவலாம். சேதமான புத்தகத்தை பெரிய புத்தகத்திற்கு நடுவில் அல்லது புத்தக ஸ்டேன்ட்டில் வைத்து படிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X