பொது செய்தி

தமிழ்நாடு

தானிய படியில் கைவண்ணம் : மதுரை கைவினைஞர் அசத்தல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement


மதுரை, மதுரை புதுார் கைவினைக்கலைஞர் மோகன், கலைநயத்துடன்கூடிய தாமிரத்திலான தானிய படியை தயாரித்து அசத்தியுள்ளார்.கைவினைத்தொழிலில் 40 ஆண்டுகள் அனுபவம் மிக்க இவர், பூம்புகார் கலைப்பொருட்கள் உற்பத்தி கூடத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்த அனுபவத்தில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான கலைநயத்துடன்கூடிய பொருட்களை தயாரிக்கிறார். சமீபத்தில் பித்தளையில் பொருட்களை உருவாக்கியதற்காக தமிழக அரசின் சிறந்த கைவினை கலைஞர் விருதை பெற்றுள்ளார்.அவர் கூறியதாவது: பொருட்களை அளக்கும் படிகளில் எந்த வேலைப்பாடும் இருக்காது. இதன்காரணமாக ஒரு படி அளவு தாமிர படியில் சங்கு சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் உருவங்களை செதுக்கி உருவாக்கினேன். பெருமாள் பாதம் கொண்ட தென்கலையும், பாதம் இல்லாத வடகலையும் கொண்ட படியையும் தயாரித்துள்ளேன். பாரி மன்னரின் வரலாற்றை சொல்லும் பித்தளை தகடு உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்துள்ளேன், என்றார். இவரை வாழ்த்த 97877 92065.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X