ஈச்சங்கூடை விற்பனை முடக்கம்: தொழிலாளர்கள் தவிப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 ஈச்சங்கூடை விற்பனை முடக்கம்: தொழிலாளர்கள் தவிப்பு

காரைக்குடி,:காரைக்குடி அருகே ஒ.சிறுவயலில் ஈச்சங்கூடை தயாரிப்பவர்கள் ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர்.இங்கு, 30 குடும்பத்தினர் கூடை முடையும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் திருமண வீடுகளில் சாதம் வடிக்கும் கூடை, கோழிகளை பாதுகாக்கும் பஞ்சாரம் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.

இவர்கள் தயாரிக்கும் கூடை ஒன்று ரூ.250 முதல் 500 வரை விற்கப்படுகிறது. வாரச்சந்தை, தினசரி சந்தைகளில் வைத்து விற்பனை செய்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கால் சந்தைகள் நடைபெறாமல், கூடைகளை விற்க முடியாமல் தவிக்கின்றனர்.

இது குறித்து கூடை முடையும் கங்கையா கூறியதாவது, ஊரடங்கால் முடைந்த கூடைகளை விற்க முடியவில்லை. குறிப்பாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இல்லாததால், ஈச்சங்கூடைகளுக்கு வரவேற்பு இன்றி, வாழ்வாதாரமின்றி தவிக்கிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X