இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா வார்டு அமையுமா| Dinamalar

இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா வார்டு அமையுமா

Added : ஜூலை 24, 2020
Share

மதுரை,:'கொரோனா பாதித்த தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கவேண்டும்,' என, மடீட்சியா வலியுறுத்தியுள்ளது.தலைவர் முருகானந்தம் கூறியதாவது: தமிழகத்தில் பாரம்பரிய தொழில் நகரமான மதுரையில் தொழில்நுட்ப நிறுவனங்களும் முன்னேறி வருகின்றன. அரசு காப்பீட்டு கழக மருத்துவமனை நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. நகரில் இரு கிளினிக் மட்டும் செயல்படுகின்றன. இவை மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இருப்பது மருத்துவமனை வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது. பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாவதால் மாநில அரசிடம் இருந்து தொழிலாளர் காப்பீட்டு கழகம் பெற்றுநிர்வகிக்க வேண்டும். கப்பலுார், கே.புதுார், உறங்கான்பட்டி, நகரி தொழிற்பேட்டை பகுதியில் கிளினிக் அமைக்க வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X