பொது செய்தி

தமிழ்நாடு

ஆலமரத்திற்கு பிறந்தநாள்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மதுரை, மதுரை மீனாம்பாள்புரத்திலுள்ள ஆலமரத்திற்கு 101 பிறந்தநாள் கொண்டாடி மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தினர்.இயக்க தலைவர் அபுபக்கர் தலைமையில் இவ்விழா நடந்தது.காமராஜ் பல்கலை துறை தலைவர் நாகரத்தினம், அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் ராஜேஷ், உதவும் உறவுகள் அறக்கட்டளை நிர்வாகி ஜமாலுதீன், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஹக்கீம், நிர்வாகி கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இயக்க நிர்வாகிகள் கூறுகையில்,''மரங்கள் மனிதர்கள் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை வழங்குகின்றன.மரங்களை வெட்டியதன் பலனை மக்கள் அனுபவிக்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையாக உள்ளது. நுாற்றாண்டுகளை கடந்த ஆலமரம் பறவைகளின் சரணாலயமாக திகழ்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X