சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் போலீஸ் கணவர் கைது

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துாரில், பெண் போலீஸ் கணவர், அவருக்கு தெரியாமல் 2 வது திருமணம் செய்ததாக மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

சிங்கம்புணரி போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் ராணி. இவரது கணவர் திண்டுக்கல்லில் பணிபுரியும் சர்வேயர் நந்தகுமார். இருவருக்கும், 12 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்தனர். அக்கால கட்டத்தில் 2018 ல், தலைமை காவலர் ராணிக்கு தெரியாமல், பரமேஸ்வரி என்ற பெண்ணை நந்தகுமார் 2 வது திருமணம் முடித்துள்ளார்.

இந்நிலையில் 2019 ல் கணவருடன் சாமதானம் ஆனபின், பெண் போலீசுக்கு விஷயம் தெரிந்தது. திருப்புத்துார் மகளிர் ஸ்டேஷனில் ராணி அளித்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் சவுதம்மா, ராணியின் கணவர் நந்தகுமார், அவரது 2 வது மனைவி பரமேஸ்வரி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து, நந்தகுமாரை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X