பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.42க்கு விற்பனை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கமுதி:கமுதில் வேப்பங் கொட்டைகள் கிலோ ரூ.42 கிலோ விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதை சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வேப்பம்புண்ணாக்கு, பருத்தி மற்றும் இயற்கை விவசாயத்திற்கு வேப்பங்கொட்டைகள் அதிகளவில் பயன்படுத்தப் படுவதால், வேப்பங் கொட்டைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் கமுதியில் பொதுமக்கள் நுாறு நாள் வேலைகளை கூட புறக்கணித்து, வேப்பங் கொட்டைகள் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நுாறு நாள் வேலைக்கு சென்றால், ஒரு நாளைக்கு 220 வரை மட்டுமே கிடைக்கிறது. ஆனால் வேப்பங் கொட்டைகள் சேகரிக்க செல்வதால், ஒரு நாளைக்கு 600 வரை லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பருத்தியை காட்டிலும், வேப்பங் கொட்டைகள் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X