சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் :ராமநாதபுரம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

வாலிபர் மீது தாக்குதல்தந்தை, மகன் உட்பட மூவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த அஜித்குமார் 24. இவரை அதே பகுதியை சேர்ந்த யஷ்வந்த் நண்பர்களுடன் கேலி செய்தார். இதை தட்டிக்கேட்ட அவரை யஷ்வந்த் 19, மாரியம்மன் கோயில் தெரு அய்யப்பன் 32, யஷ்வந்த் தந்தை நவநீதகிருஷ்ணன் 62, தாய் காமாட்சி ஆகியோர் தாக்கினர். அஜித்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பஜார் போலீசார் அய்யப்பன், நவநீதகிருஷ்ணன், யஷ்வந்த் ஆகியோரை கைது செய்தனர். யஷ்வந்த புகாரில் அஜித்குமார் மீதும்போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பெண் மீது தாக்குதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருங்குளம் வட்டான்வலசையை சேர்ந்த நாகநாதன் மனைவி நாகவள்ளி 55. இவரை முன் விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த இவரது சகோதரர் பாலகிருஷ்ணன் அவரை தாக்கினார். போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் கைது

முதுகுளத்துார்: முதுகுளத்துார் முகமதியார் தெருவை சேர்ந்தவர் முகமதுஷேக் அப்துல்லா , இவருக்கும் கீழரத வீதியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும், வாலிபால் விளையாட்டில் முன் விரோதம் இருந்து வந்தது. முகமதுஷேக்அப்துல்லாவை பிரவீன் கட்டையால் தாக்கியதில் காயமடைந்தார். முதுகுளத்துார் எஸ்.ஐ., சக்திவேல் பிரவீன் 24, கைது செய்தார்.

நகை பறிப்பு

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனுார் மேலவயலை சேர்ந்த முருகன் மனைவி மல்லிகா 36. நாகனேந்தல் ஆற்றங்கரையோரம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர்அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

மணல் லாரி பறிமுதல்

திருவாடானை: சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுமதி இல்லாமல் லாரியில் மணல் அள்ளி சென்றபோது பாண்டுகுடி அருகே தொண்டி போலீசார்சமத்துவபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் 21, என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

பாம்பு கடித்து கர்ப்பிணி பலி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே கடலுாரை சேர்ந்த கண்ணதாசன் மனைவி சுகுணா 24, ஒன்பது மாத கர்ப்பிணியான இவர் ஜூலை 21, இரவில் வீட்டில் துாங்கும் போது, பாம்பு கடித்தது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இறந்தார். திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X