பொது செய்தி

தமிழ்நாடு

நளினிக்கு சலுகை ரத்து சிறை நிர்வாகம் அதிரடி

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வேலுார் : ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு, ஒரு மாதம் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலுார் பெண்கள் சிறையில், தனி செல்லில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவர், வெளியே செல்லாமல் இருக்க, கிருஷ்ணகிரியை சேர்ந்த ராதா என்ற ஆயுள் கைதி, நளினியுடன் தங்கியிருந்தார்.கடந்த, 21 இரவு, ராதாவுக்கும், நளினிக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து விசாரிக்க, சிறை அலுவலர் அல்லிராணி சென்ற போது, நளினி தற்கொலை மிரட்டல் விடுத்தார். சிறைத் துறை அதிகாரிகள் விசாரணையில், வேண்டுமென்றே சிறை அலுவலர்களுக்கு, மன உளைச்சல் ஏற்படுத்தும் விதத்தில், நளினி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிந்தது. இதையடுத்து, நளினிக்கு ஒரு மாதம் சலுகைகளை ரத்து செய்து, சிறைத் துறை அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர். பெண்கள் சிறை அதிகாரிகள் கூறியதாவது: நளினியை, அவரது கணவர் முருகன் மற்றும் உறவினர்கள் சந்திக்கவும், பொருட்கள் வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது. நளினி செல்லில் இருந்து வெளியே வருவது போன்ற சலுகைகள், ஒரு மாதம் ரத்து செய்யப்படுகிறது.நளினியுடன் தங்கியிருந்த கைதி ராதா மாற்றப்பட்டு, வேறொருவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். நளினி தற்கொலை மிரட்டல் குறித்து, விரிவான விசாரணை நடத்தப்பட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. நளினியை புழல் சிறைக்கு மாற்றுவது குறித்து, உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்வர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24-ஜூலை-202022:05:50 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கொலைகார கும்பலை திகார்ஸ்ரீசிறைக்கு மாற்ற வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X