பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தட்டுப்பாடு, பழுதடைந்த சுகாதார வளாகம்: கெங்குவார்பட்டி பேரூராட்சி முதல்வார்டின் அவலம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 குடிநீர் தட்டுப்பாடு, பழுதடைந்த சுகாதார வளாகம்: கெங்குவார்பட்டி பேரூராட்சி முதல்வார்டின் அவலம்

தேவதானப்பட்டி:கெங்குவார்பட்டி பேரூராட்சி முதல் வார்டில் குடிநீர் தட்டுப்பாடு, கழிப்பிடம் இன்றி பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கெங்குவார்பட்டி பேரூராட்சி முதல் வார்டில் கோம்பை செல்லும் ரோடு, துப்புரவுப்பணியாளர் காலனி, புஷ்பராணிநகரில் 1500 பேர் வசிக்கின்றனர். இங்கு வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பற்றாக்குறையால் குடிநீரை கேன்களில் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இங்குள்ள ஆண்கள், பெண்கள் கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி இல்லை. கட்டடங்கள் சேதமடைந்துபயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். ரோட்டோரத்தையும், தோட்ட பகுதிகளை திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். துப்புரவுப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாயில்சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லை, எரியாத தெரு விளக்குகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் கருத்து

பழுதடைந்த ஆழ்துளை குழாய்

சாந்தி: மெயின் ரோட்டில் உள்ள ஆழ்துளை குழாயில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பிடித்து பயன்படுத்தினோம். போதிய தண்ணீர் உள்ளது. ஆனால் பழுது ஏற்பட்டு பல மாதங்களாகியும் சரி செய்யப்படவில்லை.

பேரூராட்சியில் புகார் செய்தும் பலனில்லை. நாள்தோறும் பயன்பாட்டுக்கு தேவையான நீரை தோட்ட பகுதிகளுக்கு சென்று எடுத்து வருகிறோம்.ஆழ்துளை குழாய் பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

கழிப்பிட வசதி இல்லை

கமலாராணி: கழிப்பிட வசதி இல்லை. மழைக்காலங்களில் பெண்கள் பாடு மிகவும் சிரமமாக உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் வீட்டில் இருந்து வெளியில் வர அச்சமாக உள்ளது. போதிய அளவு குடிநீர் இருந்தும் சப்ளை செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மேல்நிலைத்தொட்டி படிக்கட்டுகள் உடைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. முதல்வார்டில் குறைபாடுகளை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X